நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
சொற்றொகுதி : அச்சு எழுத்து
Type

உலோகம் அல்லது மரத்தினால் உருவாக்கப்பட்டதும், மேற்பகுதியில் புடைப்பு முறையில் இலக்கம், அல்லது  எழுத்து மற்றும் ஏனைய குறியீடுகள் போன்றவற்றை கொண்டிருப்பதுமான செவ்வக வடிவிலான அச்சுரு. உலோக எழுத்துக்களுக்கு பதிலாகக் குறிப்பாகப் பெரிய அளவில் குழைமப் பொருட்களால் தயாரிக்கப்படுவது நைலோன் அச்செழுத்தாகும். இது எடை குறைவானது. சுவரொட்டிகள், நாள்காட்டிகள் பெரிய அளவு தலைப்புக்கள் போன்றவற்றுக்கு உலோக எழுத்துக்கள் கனமாகவும் விலை கூடுதலாகவும் இருப்பதால் மரத்தில் எழுத்துக்கள் செதுக்கப்படுகின்றன. அரை அங்குலம் முதல் நான்கு அங்குலம் வரை மர எழுத்துக்கள் தயாரிக்கப்படுகின்றன. அச்சடிப்பு வேலையில் பயன்படுத்தப்படும் அச்சுக்கள் கையால் வார்க்கப்படும் அச்சு, பொறி முறை அச்சு, ஔிப்படக் கோப்பு முறையிலான அச்சு என மூவகைப்படும். முதல் இரு வகையிலும் உலோகத்தின் ஒரு பக்க முடிவிடத்தில் மேலெழுந்த வகையில் எழுத்தின் முகப்பு அமைந்திருக்கும். மூன்றாவது வகையில் அச்சானது ஔிப்பட முறையில் மீளுருவாக்கம் செய்யப்படுகிறது.

அச்சு ஒன்றில் திண் கோடு, மென்கோடு, செரிப் எனப்படும் குறுக்கு முடிவுக் கோடுகள் என்பவற்றை உள்ளடக்கிய பகுதி முகப்பு எனப்படுகிறது. நாற்புறமும் அச்சடிக்கும் பகுதியால் சூழப்பட்டு நடுவில் உள்ள தாழ்மையான பகுதி அச்சடி பள்ளம் (counter) எனப்படுகிறது. அச்சடிக்கும் பகுதியிலிருந்து சாய்வாகக் கீழேயுள்ள பகுதி சரிவு (bevel). சரிவுக்குக் கீழ் தட்டையாக உள்ள பகுதி தோள் (Shoulder) எனப்படுகிறது. சரிவு தோள் ஆகிய இரண்டும் சேர்ந்து நாடி (beard) எனப்படுகிறது. அச்சிடும் பகுதிக்கு கீழே உள்ளது காம்பு. பெல்லி அல்லது வயிறு அச்சின் முன் பாகம். இதன் நடுவில் உள்ள ஆழமான வெட்டு்க் கோடு அடையாளக்கோடு (nick) எனப்படும். அச்சின் பின் பகுதி முதுகு (back) எனப்படும். பக்கம். இரு பக்கங்களும் பக்கம் (side).  எனப்படும். ஒரு பக்கத்தில் அழுத்தியுள்ள பகுதி பின்மார்க் எனப்படும். இதில்அச்சின் அளவு அல்லது வார்ப்படத் தொழிலகத்தின் முதல் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அச்சின்  ஆழம் போன்ற பகுதி ஃபிட் எனப்படும். கால்களுக்கு நடுவில் உள்ளது. க்ருவ் எனப்படும்.. அச்சிடும் பகுதி வௌியே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி நீள்விளிம்பு (hern)  எனப்படும். உதாரணம் சாய்வு எழுத்து. நேர் கோடுகள் அச்சிட உதவும் பித்தளை அல்லது ஈயக்கலவைத் துண்டு வரித்தகடு (rule) எனப்படும். விளம்பரங்களுக்கு நாற்புறமும் அலங்கரிக்க உதவும் பு இலை புள்ளி கோடு போன்ற அமைப்புக்கள் கொண்டது அரிகை எனப்படும். வரிகள் விட்டுப்போகாமல் இருக்க அச்சுக்கோப்பதற்கு உதவுவது வரி வழிகாட்டு ஆகும். கையெழுத்துப் படியை அச்சுக்கோக்கும்போது வைத்துக் கொள்ள உதவுவது படி பற்றி எனப்படும்.. படங்களைச் சீராக அச்சிடவும் படியச்செய்யவும் தயார்செய்ய உதவும் சாய்வுப் பலகை படியச்செய் பலகை. எனப்படும் இது சிறப்புவகைக் கத்தியால் வெட்டி ஒட்டப்படுகின்றது. எழுத்துக்கள் பிளாக் உயரங்களைச் சரிபார்க்கஉதவும் கருவி அச்சுயர அளவி. எனப்படும். அச்சிடும் எந்திரப்பகுதிக்குப் படிவத்தை அனுப்புமுன் பக்கங்கள் நேர்கோடாக உள்ளனவா என்றும் ஓரங்களைச் சரிபார்க்கவும் படங்களை மையப்படுத்த வண்ணங்கள் ஒன்றன் மீது ஒன்று சரியாக உட்காருகின்றனவா எனவும் பார்க்க உதவும் மேசை படிவம் கட்டும் மேசை எனப்படும். அச்சு மை கத்தி. அச்சிட உதவும் மையை டின்னிலிருந்து எடுத்து எந்திரத்தில் தடவவும் பல வண்ண மை கூட்டவும் உதவும். அச்சு மை கூட்டும் மேசையானது பல வண்ண மைகளைத் தேவையான வண்ணத்திற்கு கலக்க உதவும். வெட்டவும் எளிதில் மடிக்க அழுத்தம் கொடு்க்கவும் உதவும் எஃகுத் தகடு வெட்டல் மடித்தல் தகடு எனப்படும். ( perforating rule) காகிதம் கிழிக்கவும் ஓட்டைகள் போடவும் உதவும் பித்தளைத் தகடு துளைவரித்தகடு எனப்படும். அச்சிடும் போதே வரிசையாகப் பக்கங்களில் இலக்கங்கள் போட உதவும் எந்திரம் எண்ணிடும் எந்திரம். மை உருளைகளைப் பாதுகாப்பாக வைக்கும் சாதனம் உருளைச் சாய்சட்டம். (சழடடநச சயமந) ஆகும். மெக்கானிக்கல் காய்ன் (quoin) உலோகத்தினால் தயாரிக்கப்பட்ட சாவியினால் இயங்கும் ஃபாரம் முடுக்கும் சாதனம். மரக் காயன்களுக்குப் பதிலாகப் பயன்படுகிறது. குழைமத்தால் (plastic) தயாரிக்கப்பட்ட இடைவௌி சுட்டும் சாதனம் குழைய இருக்கை எனப்படும். (அறிவியல் களஞ்சியம் 2005)  

மேலும் பார்க்க < > அச்சிடுதல் உபகரணங்கள்

தொடர்புடைய இதர சொற்றொகுதிகள்
அச்சில் உள்ள வௌியீடுகள்
Index
அச்சு எழுத்துரு
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333