தமிழக அரசு சிறந்த புத்தகங்களுக்குப் பரிசு
வழங்கும் திட்டத்தை 1947 முதல் நடைமுறைப்படுத்திவருகிறது.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் 1960 வரை
வழங்கப்பட்ட இப் பரிசுகள், 1961 முதல் தமிழ் வளர்ச்சித்துறையினால்
தொடரப்படுகிறது. ஆரம்ப நாட்களில் முதல் பரிசாக 1000.00 ரூபாவும் இரண்டாம் பரிசாகச்
சான்றிதழும் வழங்கப்பட்டது. இத்தொகை படிப்படியாக உயர்ந்து, 2008 இல்
முதல் பரிசாக 20000.00 ரூபா எழுத்தாளருக்கும்
அப்புத்தகத்தைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு 5000.00
ரூபாவுமாக உயர்ந்துள்ளது.
இதுவரைகாலமும் இவ்வாறு தமிழக
அரசின் பரிசு பெற்ற புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடித் தொகுத்து
தர முயற்சி செய்கிறோம்.
ஓர் எழுத்தாளர் அல்லது பதிப்பகம் எத்தனை
முறை பரிசு பெற்றுள்ளது என்பதையும் ஆண்டுவாரியாக எந்த எந்தப் புத்தகங்களுக்குப் பரிசு
கிடைத்துள்ளது என்பதையும் இந்தப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.