தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அரசியல்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
திருமா வேலன், ப
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 50
புத்தகப் பிரிவு : உரையாடல்
பக்கங்கள் : 88
புத்தக அறிமுகம் :
நல்லகண்ணு - அ.மார்க்ஸ் ஆகிய இருவரும் அரசியல் தளத்தில் ஆக்கபூர்வமான விடயங்களில் உரையாடியதை நூல் வடிவில் பதிவு செய்துள்ளார் திருமா வேலன். கட்சி தேவையா? தமிழ்த் தேசியம் ஆபத்தானதா? ஈழத்தில் நடப்பது மதப்பிரச்சனையா? அணு ஆற்றல் இல்லாமல் இருக்க முடியாதா? கட்சித் தலைமை மையப்படுத்துவதே வீழ்ச்சியா? பொருளாதார வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட்டுக்கள் எதிரியா? கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம்
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : ஆனந்தவிகடன்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரர் நல்லகண்ணு, சிறு பத்திரிகை வட்டாரத்தில் பிரபலமான சமூக விமர்சகர் அ.மார்க்ஸ்... இருவருக்கும் இடையேயான நீண்ட விவாதத்தின் தொகுப்பே இந்தப் புத்தகம். இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம், புதிய பொருளாதாரக் கொள்கை போன்ற கடந்த சில மாதங்களின் முக்கியமான அரசியல் நடப்புகள் முதல், சோவியத் ரஸ்யாவின் வீழ்ச்சி, போஸ்ட்மாடர்னிசம் வரை பேசுகிறார்கள். தமிழ்த் தேசியம் ஆபத்தானதா, பொருளாதார வளர்ச்சிக்கு கம்யூனிஸட்கள் எதிரியா போன்ற சாமானிய மனிதனின் கேள்விகளுக்கு விடை தேடும் விவாதம். தன் கருத்தே சரி என்ற விதண்டாவாதமோ, எதிராளியை மடக்க வேண்டும் என்ற பேச்சு சாதூர்யமோ இல்லாமல், சமூக அக்கறையுடன் கூடிய, நம் அரசியல்அறிவை விஸ்தரிக்கும் மோதல்!

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan