தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)
ஆசிரியர் :
இரத்தினதுரை, புதுவை
பதிப்பகம் : விடியல் பதிப்பகம்
Telephone : 914222576772
விலை : 300
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 432
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புதுவை தன் கவிதைகளில் பாடுபொருள் பற்றிய முழுத்தோற்றத்தையும், காட்சியமைப்புக்குள் நிற்பனவாகிய மிக மிகச்சிறிய விடயங்களையும் சேர்த்துக்கொள்வது; ஒரு நல்ல ஓவியன் பின்புல வர்ணத்தின் மீது கைலாவத்தினால் அழுத்தியும், மெலிவித்தும் காட்டும் தன்மைபோல அமைவதை உணரலாம். இத்தொகுப்பிற்கான தலையங்கமே அந்த மனப்பாங்கின் வெளிப்பாடுதான் புதுவையின் கருத்துநிலைத் துணிபும், கவித்துவ ஆளுமையும் அவரை இன்றைய சராசரித் தமிழ் மனிதனின் குரலாகவும், அதிலும் பார்க்க முக்கியமாக அவனுக்கான கவிதைக்குரலாகவும் வைத்திருப்பதைக் காணலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan