வணக்கம்,
தமிழ்ப் பதிப்பாளர்கள் மற்றும்
எழுத்தாளர்கள் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தைபிறந்தால் வழி பிறக்கும் இது
தமிழர்களின் முது மொழி.
சென்னையில் 29வது புத்தகக் கண்காட்சியில்
பங்குபற்றி அதன்மூலம் நல்ல பெறுபேறுகளை பெற்று மகிழ்ச்சியில் உள்ள உங்களுக்கு
இன்னுமோர் நல் வழியை, நாம் உருவாக்கியுள்ளோம்.
அதுவே விருபா தமிழ்ப் புத்தக தகவல்
தளம். www.viruba.com
வருடத்தில் 365
நாட்களும், தினமும் 24 மணி நேரமும் இணையத்தில் நடை பெறவுள்ள ஓர் தமிழ்ப் புத்தகக்
கண்காட்சிக்கு உங்களை அழைக்கிறோம்.
நாம் கணினி யுகத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். நாளொரு வடிவமும் பொளுதொரு விடயமாக, நம்மைச் சுற்றியுள்ள
அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. கணினி பயன்பாட்டின்
மேம்படுத்தப்பட்ட அதி உன்னத வடிவமான இணையத்தில் ஏராளமான விடயங்கள் கொட்டிக்
கிடக்கின்றன. அள்ள அள்ள குறையாத தகவற் சுரங்கமாக இணையம் இருந்தாலும், எமது தாய்
மொழியாகிய தமிழில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்ற நிலை இன்னமும்
உருவாகவில்லை.
தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய பூரண
ஒருங்கிணப்பட்ட ஒரு தகவல் தரவு தளம் இல்லை.
ஒர் தமிழ் எழுத்தாளர்,
எத்தனை பதிப்பகங்கள் மூலம், எத்தனை பிரிவுகளில், எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளார்
? எழுத்தாளரின் முகவரி
என்ன, தொலைபேசி இலக்கம் என்ன, மின்-அஞ்சல் முகவரி என்ன?
ஒரு பதிப்பகம் எத்தனை எழுத்தாளர்களின், எத்தனை பிரிவுகளில், எத்தனை புத்தகங்களை
வெளியிட்டுள்ளது ?
பதிப்பக முகவரி என்ன, உரிமையாளர் யார், நிர்வாக ஆசிரிரியர் யார், இணையதளம் எது?
எத்தனை புத்தகங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன ?
தமிழ் புத்தகங்களுக்கு தரப்படும் விருதுகள் யாவை, யார் தருகிறார்கள் ?
தமிழ்ப் புத்தகங்களுக்கு இதர தமிழ் ஊடகங்கள் வளங்கிய மதிப்புரைகள் என்ன?
தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்கள் எங்கே, எப்போது நடைபெறுகின்றன ?
தமிழ்ப் புத்தக கண்காட்சிகள் எங்கே, எப்போது, யாரால் நடத்தப்படுகின்றன ?
போன்ற தகவல்கள் ஒருங்கிணைப்பட்டு பொதுவில்
இல்லை.
இந்த குறையை நிவர்த்தி செய்யும் முகமாக
நாம் விருபா தமிழ்ப் புத்தக தகவல் தளத்தை உருவாக்கியுள்ளோம்.
விருபா தளத்தினூடாக நாம் தமிழ்ப்
புத்தகங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தரவுள்ளோம்.
நாங்கள் இங்கு அனைத்து
என்று குறிப்பிட்டதில் பின்வரும் விடயங்கள் அடங்குகின்றன.
1.புத்தகம்
a. பெயர்
b. விலை
c. அட்டைப்படம்
d. பதிப்பு விபரம்
e. பிரிவு
f. பெற்ற விருதுகள்
g. பக்கங்களின் எண்ணிக்கை
h. அளவு
i. தன்மை
2.புத்தகத்தை
எழுதிய எழுத்தாளரர்
a. பெயர்
b. புகைப்படம்
c. முகவரி
d. தொலைபேசி இலக்கம்
e. மின்னஞ்சல் முகவரி
f. வலைப்பதிவு
g. கல்வித்தகுதி / பணிவிபரம்
h. பெற்ற சிறப்புப் பட்டங்கள்
i. பற்றிய சிறு குறிப்பு
3.புத்தகத்தை
வெளியிட்ட பதிப்பகம்
a. பெயர்
b. விற்பனைச் சின்னம் (Logo)
c. முகவரி
d. தொலைபேசி இலக்கம்
e. மின்னஞ்சல் முகவரி
f. வலைப்பதிவு / இணையதளம்
g. ஆரம்பித்தவர் / உரிமையாளர்
h. நிர்வாக ஆசிரியர்
4.புத்தகத்திற்கு இதர தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்
5.விற்பனை
நிலவரம்
6.புத்தகத்தைப்
பற்றிய வாசகர் கருத்துகள்
7.புத்தக
வெளியீட்டு விழாக்கள் பற்றிய தகவல்கள்
8.புத்தகக்
கண்காட்சிகள் பற்றிய தகவல்கள்
9.விருது
வழங்கும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள்
என்று, புத்தகத்துடன் தொடர்புடைய அனைத்து
விடயங்களையும் நாம் விருபா தளத்தினூடாக தரத் தயாராகவுள்ளோம். பதிப்பகங்களால்,
எழுத்தாளர்களால் எங்களுக்கு தரப்படும் அனைத்து தகவல்களும் அப்படியே
வெளிப்படையாக எமது தளத்தில் காண்பிக்கப்படும்.
நோக்கம்
எமது நோக்கம் முற்றும் முழுதாக தமிழ்ப்
புத்தகங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் இணையத்தினூடாக தருதல் மட்டுமே.
தமிழர்களால் எழுதப்பட்ட மற்றைய மொழிப்
புத்தகங்களையோ, அல்லது தமிழர்களுக்கு பயன்தரக்கூடிய வேறு எந்த மொழிப்
புத்தகங்களையும் எமது தளத்தில் இணைக்கப் போவதில்லை. தமிழ்ப்புத்தகம் தொடர்பில்லாத
எந்த ஒரு விடயத்தையும் நாம் எமது தளத்தில் இணைக்கப்போவதில்லை. இதனை ஒரு குறுகிய
மனப்பான்மை நிலை என்று எவரும் நினைக்க வேண்டாம்.
எமது முதலும் இறுதியுமான நோக்கம் தமிழ்ப்
புத்தகங்களும் அதனுடன் தொடர்புடைய விடயங்களும் மட்டுமே.
பல சேவைகளை ஆரம்பித்து, எதிலும் வெற்றியை
அடையாமல் இருப்பதைவிட, ஒரு விடயத்தை மட்டுமே எடுத்து அதில் பூரண வெற்றியை அடையவே
நாம் விரும்புகிறோம்.
அந்த ஒரு விடயம் புத்தகமும் அதனுடன்
பின்னிப் பிணைந்த எழுத்தார்கள், பதிப்பகங்கள், விருதுகள், ஊடக மதிப்புரைகள்
மற்றும் வாசகர்கள் கருத்துகள் மட்டுமே.
இன்று பல தமிழ் ஊடகங்கள் தங்களுடைய
இதழ்களில்/வெளியீடுகளில், புத்தகங்களுக்கு மதிப்புரைகளை வெளியிடுவதை ஒரு வழக்கமாக
கொண்டுள்ளன. இதற்காக அவ்வூடகங்கள் சிறந்த கல்விமான்களிடமும், துறை சார்ந்த
வல்லுனர்களிடமும் மதிப்புரைகளைப் பெற்று வெளிடுகின்றன. இதற்காக சில மணிநேரங்கள்
செலவிடப்படுகிறது. ஆனாலும் அவ் வெளியீடு வெளியாகி அதிகபட்சமாக இரண்டு வாரங்களின்
பின்னர் அவ் இதழ்கள்/வெளியீடுகள் இலகுவில் கிடைக்காது.
அதே நேரம் ஒரே புத்தகத்திற்கு பல ஊடகங்கள்
வழங்கிய மதிப்புரைகளையும் ஒரே பார்வையில் பார்க்கவும் முடியாது.
இந்த குறையையும் நாம் தீர்த்து ஒரு
புத்தகத்திற்கான, பல ஊடக மதிப்புரைகளை ஒரே பார்வையில் பார்ப்பதற்கு வசதிகளை விருபா
தகவல் தளத்தில் உருவாக்கியுள்ளோம்.
சிறந்த கல்விமான்களும், துறை சார்ந்த
வல்லுனர்களும் வழங்கிய மதிப்புரைகளை ஓரிடமாக, நீண்ட நாட்களுக்கு பொதுவில்,
இணையத்தில் வைத்திருப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையான வாசகர்களைச் சென்றடையயும்.
இதன்மூலம் தரமான, நல்ல புத்தகங்களை வாசகர்களும் இலகுவில் அடையாளம் காணமுடியும்.
புத்தகங்களப் பற்றிய தகவல்களை
பதிப்பகங்களிடமும், எழுத்தாளர்களிடமும், ஊடகங்களிடமும் பெற்று, அவற்றை
ஒருங்கமைத்து திரட்டி தருதலே எமது பணி.
எமது விருபா புத்தகத் தகவல் தளம்,
வாசித்தலை நேசிக்கும் வாசகர்களுக்கும், மற்றும் புத்தகங்களை எழுதிவிட்டு,
பதிப்பித்து விட்டு, எங்கனம் அதனை விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்துவது என்று
தெரியாத நிலையில் உள்ள பதிப்பகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பயனுள்ளதாக
அமையும் என்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்களின் பலம்
நாங்கள் எந்த பதிப்பகத்தையோ அல்லது
எழுத்தாளரையோ சார்ந்தவர்கள் இல்லை. தனிப்பட்ட ரீதியில் எந்த ஒரு பதிப்பகத்தையோ
அல்லது எழுத்தாளரையோ முன்னிலைப்படுத்துவதோ, விளம்பரப்படுத்துவதோ எமது நோக்கம்
அல்ல.
எங்கள் தளத்தில் யாவும் அகர வரிசையில்
அல்லது இணைக்கப்பட்ட திகதியின் அடிப்படையில் மட்டுமே
வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
விற்கக் கூடிய புத்தகம், விற்காத முடியாத
புத்தகம் என்ற வேறுபாடு எமது தளத்தில் இல்லை. அனைத்து புத்தகங்களும் சமனான இடம்
வழங்கப்படும்.
எங்கள் விருபா
தமிழ்ப் புத்தக தகவல் தளத்தில் புத்தக விற்பனை இல்லை.
விளம்பரங்கள் ஏதுமின்றி சீரிய
ஒழுங்குபடுத்தலுடன் உள்ள எமது தளத்தை, புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும்
தமிழர்கள், தமிழர்களால் நடத்தப்படும் தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையங்கள்
பாரட்டுகின்றன. தங்களுடைய இணையத்தளங்களில், ஊடகங்களில் விருபா தமிழ்ப் புத்தக
தகவல் தளத்தைப் பற்றிய செய்திகளை வெளியிடவுள்ளன.
இவை எமக்கு, மிகப்பெரிய பலமாகும்.
விருபா தமிழ்ப் புத்தக தகவல் தளத்தில்
உங்களுடைய புத்தகங்களை சேர்த்துக் கொள்வதன்மூலம், உலகெங்கும் உங்கள் புத்தகங்கள்
இலகுவில் அறியப்பட, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, சரிவர பயன்படுத்திக் கொள்ளுமாறு
அனைத்து பதிப்பகங்களையும், எழுத்தாளர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
பதிப்பகங்களுக்கும்,
எழுத்தாளர்களுக்கும் எமது பணிவான வேண்டுகோள், நீங்கள் முதலில் எங்கள் இணைய தளத்தை
நன்கு ஆராய்ந்து பாருங்கள், அதன்பின்னரே புத்தகங்களையும் கட்டணத்தையும் எமக்கு
அனுப்புங்கள். உங்கள் புத்தகங்கள் எந்த பிரிவின்கீழ் இணைக்கப்பட வேண்டும் என்பதை
மறக்காமல் குறிப்பிட்டு அனுப்பவும்.
கட்டணம்
365 நாட்களும், தினமும் 24 மணி
நேரம், இணையத்தில் நடைபெறவுள்ள, தமிழ்ப் புத்தக கண்காட்சியில் உங்களுடைய
புத்தகங்கள் இடம்பெற,
புத்தகங்கள் அனுபப்பட வேண்டிய முகவரி :
T.Kumaresan OR www.viruba.com
B-1, Anandam Flats
No: 12, Iyyappan Street,
Ullagaram,
Chennai 600 091.
Tele : +91 44 42154150
Mobile: 91 9840254333
e-mail: t.kumaresan@viruba.com
ஒரு
புத்தகத்திற்கான கட்டணம் : 100.00 In Rs
(DD Only - Payable at Chennai )
2002.01.01 இற்கு முன்னர் வெளிடப்பட்ட புத்தகங்களுக்கு,
கட்டணம் எதையும் பெறாமலே, உள்ளிட தயாராக உள்ளோம்.
மேலும் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பாக
கவனத்தில் எடுக்கத் தவறிய விடயங்கள் ஏதாவது இருப்பின் அவற்றை எங்களுக்கு
தெரியப்படுத்துங்கள். உங்கள் ஆலோசனைகள் பொது நோக்குடையவையாக இருப்பின், அவற்றை
நாம் மேம்படுத்தி எமது தளத்தில் இணைத்துக்கொள்வோம்.
இங்ஙனம்,
து.குமரேசன்
விருபா தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு. 2006.02.18