தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புற்றுநோயும் புதிய அணுகுமுறையும் Herbal Oncology
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற்பதிப்பு (2004)
ஆசிரியர் :
ஸ்ரீதர், கே.ஸ்ரீ
பதிப்பகம் : உபாசனா பப்ளிக்கேஷன்ஸ்
Telephone : 914424339596
விலை : 300
புத்தகப் பிரிவு : மருத்துவம்
பக்கங்கள் : 288
புத்தக அறிமுகம் :
மரு கே.ஸ்ரீ.ஸ்ரீதர் அவர்கள் மிக எளிய நடையில் புற்றுநோய் பற்றியும் அதன்காரணங்கள் பற்றியும் விளக்கியுள்ளார்கள். ஒவ்வோர் உறுப்பில் புற்றுநோய் எவ்வகையில் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்ன என்றெல்லாம் தெளிவாக விளக்கி, இந்நோய்களை தடுப்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : கலைமகள்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

இன்றைக்கு எத்தனையோ வளர்ச்சிகளை ஆங்கில மருத்துவம் கண்டபோதும், புற்றுநோய் சவாலாகவே இருந்து வருகிறது. ஆனால் மூலிகை வைத்திய முறையில் குணமாக்கலாம் என்பதை இந்நூல் பல ஆதாரங்களைக் காட்டி விளக்குகிறது. புற்றுநோயை அறிந்து கொள்ளவும், வராமல் தடுக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் பல வழிமுறைகளை டாக்டர் எளிய தமிழில் எழுதியுள்ளார். நாம் அன்றாடம் உணவில் அலட்சியப்படுத்தும் கறிவேப்பிலை, மிளகு, சீரகம், துளசி போன்றவை புற்று நோயை குணப்படுத்த வல்லவை என்பதைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். உடலின் ஒவ்வொரு பாகத்தில் தோன்றும் புற்று நோயையும் விளக்கி நம்மை எச்ரிக்கை செய்கிறார் டாக்டர். படிக்க, பயன்படுத்த ஏற்ற நூல். --- நவம்பர் 2005 ---

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan