தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஜே.ஆர்.டி டாடா
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற்பதிப்பு (2004)
ஆசிரியர் :
மணியன், அறந்தை
பதிப்பகம் : கலைஞன் பதிப்பகம்
Telephone : 914424345641
விலை : 80
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 256
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : கலைமகள்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் பெருமை தேடித்தந்தவர்களில் ஒருவர் ஜே.ஆர்.டி. டாடா. சிறந்த நிர்வாகி. குறைந்த வயதில் பெரிய பொறுப்புக்களை வகித்தவர். காலம் கருதி பின் வாங்காது திட்டமிட்டுச் செயற்படுபவர் என பல பெருமைகளை உடைய டாட்டாவின் வாழ்க்கை வரலாற்றை நான்கு பகுதிகளாக அறந்தை மணியன் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாற்றைப் புள்ளி விபரமாக மட்டும் கூறாமல் நிகழ்வுகளில் சுவை கூட்டி உண்மையிலிருந்து விலகாமல் எழுதியுள்ளார். டாடாவின் முடிவுகளால் ஏற்பட்ட நிறைகுறைகளையும் ஆசிரியர் எழுதியுள்ளார். டாடாவின் துணிச்சல் மிக்க செயல்கள் தேடித்தந்த வெற்றிகளையும் அரசாங்கம் செய்யும் தவறுகளைச் சுயநலமின்றி சுட்டிக்காட்டிய நேர்மையையும் ஆசிரியர் விரிவாக எழுதியுள்ளார். "ஏர் இந்தியா" "ஏர் இந்தியா இண்டர்நேஷனல்" நிறுவனங்கள் உருவாகக்காரணமாகவிருந்த டாடாவின் செயற்பாடுகள் இந்திய பொருளாதாரத்தின் தூண் என்றே சொல்லலாம். 17 கோடி ரூபாய் சொத்தை தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ஐம்பது ஆண்டுகளில் பத்தாயிரம் கோடியாக உயர்த்தியவர் டாடா. டாடாவின் வாழ்கை தன்னம்பிக்கை ஊட்டும். --- ஜூன் 2005 ---

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan