தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சிதைந்த கூடு
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
புகழேந்தி, ஓவியர்oviarpugal@yahoo.com
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 40
புத்தகப் பிரிவு : ஓவியம்
பக்கங்கள் : 44
புத்தக அறிமுகம் :
மனித சமூக வரலாற்றில் இனத்தின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால், மனிதனை மனிதனே அழித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம். அதேபோல் இயற்கையின் சீற்றத்தால் புயல், வெள்ளம், தீ, நில அதிர்வு போன்றவற்றால் ஏராளமான மனித அழிவுகள் ஏற்படுவதையும் காண்கிறோம். இவை அனைத்தும் ஒரு ஓவியன் என்ற அடிப்படையில் என்னுடைய சிந்தனையை எவ்வாறு பாதித்தன என்பதை நான் பதிவு செய்தது. - - - ஓவியர் புகழேந்தி - - -
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : இந்தியா டுடே
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

குஜராத் பூகம்பத்திற்குப் பின் அதன் அழிவுகள் பற்றி சுமார் 150 அடி நீளத்திற்கு ஒரு ஓவியத்தை வரைந்தார் புகழேந்தி. அந்த ஓவியம், அதற்குப் பொருத்தமாக இன்குலாப் எழுதிய கவிதைகள்( உதா: பூமிக்கு அகிம்சை சொன்ன காந்தியின் பீமிக்கு அகிம்சை இல்லையா?) இந்த ஓவியம் குறித்து பாலுமகேந்திரா, இன்குலாப், காசி ஆனந்தன் போன்றவர்கள் எழுதிய பாராட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. பிற பத்திரிகைகளில் ஓவியம் குறித்து வெளிவந்த கருத்துக்களும் புத்தகத்தில் உண்டு. - - - மே 2, 2007 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan