தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இராகவன், அ சாத்தன்குளம்
பதிப்பகம் : அமிழ்தம் பதிப்பகம்
Telephone : 914424339030
விலை : 130
புத்தகப் பிரிவு : பண்பாட்டு வரலாறு
பக்கங்கள் : 208
புத்தக அறிமுகம் :
தமிழர்களின் புழங்குபொருள் பண்பாடு குறித்து விரிவான ஆய்வுகள் இன்னமும் நிகழ்த்தப்பெறாத நிலையில், நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன் அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும். தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள் பற்றிய ஓர் ஆய்வு. 1970 களில் வெளிவந்த நூலின் மறுபதிப்பு.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : பதிப்புத் தொழில் உலகம்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : மைதிலி

தமிழகச் சிற்ப வகைகளில் விளக்குச் சிற்பத்திற்கு முதன்மையான இடம் உண்டு. தமிழகத்தில் விளக்கு, பயன்படுத்தப்பட்ட முறைகளை வரலாற்றுப் போக்கில் ஆசிரியர் இந்நூலில் சொல்லியுள்ளார். ஈழநாட்டைச் சேர்ந்த காலஞ் சென்ற கலைமேதை க. சண்முகநாதன், 300 க்கும் மேற்பட்ட திருவிளக்குகளைச் சேகரித்து வைத்திருந்த விபரத்தை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலைத் தீபத்தின் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார். பல்வேறு தீபங்களின் படங்களை அழகுறத் தந்துள்ளார். இயற்கை வழிபாடை தமிழர்களின் வழிபாடு என்ற கருத்தாக்கத்தை உறுதி செய்து கொள்ள இந்நூல் அடிப்படையாக அமைகிறது. தமிழர்களின் சிற்ப வரலாற்றில் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் அவை சார்ந்த இடங்களுக்கும் உள்ள உறவை அறியவும் இந்நூல் பெரிதும் உதவும். - - - ஜூன் 2006 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan