தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அரசியல் சுவடுகள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
கிருஷ்ணா ஆனந்த், விthanalpathippagam@gmail.com
பதிப்பகம் : தணல் பதிப்பகம்
Telephone : 919841011078
விலை : 65
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 152
புத்தக அறிமுகம் :
பீகார், உத்தரப் பிரதேசம், மாநில அரசுகளின் ஆட்சி, மத்திய அரசின் ஆட்சியைப் பற்றிய ஆசிரியரின் விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பு. இக் கட்டுரைகள் தினமலரில் வெளியானவை
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : 2007.05.02
மதிப்புரை வழங்கிய இதழ் : இந்தியா டுடே
மதிப்புரை வழங்கியவர் பெயர் : கானகன்

தமிழ் இதழியல் மோசமில்லை. மக்களின் உண்மையான பிரச்சனைகள் வெளிப்படவும் தமிழ் இதழ்களில் வாய்பிருக்கிறது என்பதைக் காட்டும் கட்டுரைகள்.

பரபரப்பு செய்திகளுக்கே பொதுவாக தமிழ்ப் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அரசியல் விமர்சனக் கட்டுரைகளுக்கான இடம் வெகு குறைவு. அப்படிப்பட்ட சூழலில் தணல் பதிப்பகம் இரு செய்திக் கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தத் தொகுப்புகள், தமிழ் இதழியல் அப்படி ஒன்றும் மிகவும் மோசமாக இல்லை: மக்களின் உண்மைப் பிரச்சனைகள் வெளிப்படவும் அங்கே வாய்ப்பிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

அதிலும், இந்து நாளேட்டின் குறிப்பிடத்தக்க செய்தியாளராக இருந்த கிருஷ்ணா ஆனந்தின் அனல் பறக்கும் கட்டுரைகள், ஒரு தமிழ் நாளிதழில் தொடர்ந்து வெளியாயிருக்கின்றன என்பதை நம்ப சற்று கடினமாகத்தான் இருக்கிறது. பிஹார், குஜராத், காஷ்மீர், தாரளமயமாக்கல் என்று பல்வேறு பிரச்சனைகளை, இடதுசாரிக் கண்ணோட்டத்தில் அவர் எழுதியிருக்கிறார். இதில் வரவேற்கத் தகுந்த ஒரு அம்சம் என்னவெனில், அவர் ஒரு இடதுசாரியாக இருந்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தவறு செய்துவிட்டதாக கருதும்போது, அது புத்த தேவின் கொள்கைகளாக இருந்தாலும் சரி, அல்லது சோம்நாத்சட்டர்ஜியின் வழுக்கலாக இருந்தாலும் சரி, வெட்டொன்று துண்டிரண்டாகக் கூறி விடுகிறார். சாதி, மத, மொழி பாகுபாடுகளையெல்லாம் கடந்த உயரிய மனிதநேய சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்தவையே கிருஷணா ஆனந்தின் அனைத்துக் கட்டுரைகளும். அவற்றை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்த தினமலர் நெல்லை பதிப்பினரை மனமாரப் பாராட்டலாம்.

ஆனாலும் ஒரு சில பிரச்சனைகள், வைகோவை ஓகோவென்று பாராட்டுகிறார் கிருஷ்ணா ஆனந்த் அது எவ்வித இடதுசாரி சிந்தனையின் பாற்பட்டு என்று விளங்கவில்லை. குஜராத் படுகொலையின்போது வாஜ்பாயி அரசிற்கும் ஏன் மோடிக்குமேகூட வக்காலத்து வாங்கியவரை தமிழினத்தின் எதிர்காலம் என்பது போல சித்தரித்திருப்பது உறுத்துகிறது.

திராவிட பாரம்பரியத்திலிருந்து காங்கிரஸிற்கு வந்த தமிழருவி மணியன் இந்தத் தொகுப்பிற்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். அவர் மிகச் சிறந்த படிப்பாளி: பண்புமிக்கவர் ஆனாலும் , அவருக்கும் இடதுசாரி அரசியலுக்கும் தொடர்பென்ன? அரசியல் நாகரீகம் வேறு கொள்கை ரீதியான கடுமையான முரண்பாடுகளுடையவர்களிடம் அணிந்துரை வாங்கிப் பெறுவது வேறு அல்லவா? இத்தொகுப்புகளில் ஒரு பொதுவான குறைபாடு. எந்தக் கட்டுரை எப்பொழுது பிரசுரமானது என்பது குறித்த தகவலே இல்லை. அப்படிப்பட்ட விவரங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

 

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan