ஹிட்சாக்கின் பரம ரசிகரான கலைச்செழியன் தமிழில் ஒரு பெரிய நூலை வெளியிட்டிருக்கிறார். அது கிடைக்காதவர்களுக்கும், அந்நூலிற்கான கீபுக்காக இதனைக்கொள்ளலாம். எளிமையான முறையிலும், இனிமையாகவும் இவரது நடை அமைந்துள்ளது. நூல் ஆழமாக இல்லையே என பாரத்தபோதுதான் தெரிந்தது "என்னைப் போலவே எல்லா சாமான்ய சினிமா ரசிகர்களுக்கும்" என்று சமர்ப்பணம் செய்திருப்பது. மர்மங்களை விற்றவர், ஹிட்சாக்கின் ஆன்மா, மௌனமே பாஷையாய், மௌனம் பேசியது, ஹாலிவுட், இறுதிப் படங்கள், கடைசி நாள், ஹிட்சாக்குடன் இரண்டு உரையாடல்கள், திரைக்கதை என்னும் கலை முதலிய தலைப்பில் ஹிட்சாக் பற்றிய ஒரு நல்ல அறிமுக நூலை தந்துள்ளார் கமலக் கண்ணன்.
- - - அக் - நவ 2007 - - -