தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அரவானிகள் சமூக வரைவியல்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
பிரியா பாபு
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 70
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 96
புத்தக அறிமுகம் :
பொதுவெளிச் சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப்பிறந்து உணர்வுகள் மாற்றத்தால் பெண் உணர்வை உணர்ந்து பெண்ணாகிப் போன அரவாணிகளை அடையாளப்படுத்துகிறார் பிரியா பாபு.
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : 2008.03.14
மதிப்புரை வழங்கிய இதழ் : தீக்கதிர்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஜி.செல்வா

நிலவு வெளிச்சத்தில், ரயில் நிலைய ஓரங்களில், பேருந்து நிலையங்களில், பலரின் வெறுப்புக்கும், ஒரு சிலரின் சிலநேர விருப்புக்கும் உரியவர்களாய்.. முக்கிய தினங்களில் தங்களது கரவொலியையே அடையாளமாய் வைத்து, காசு கேட்டு நச்சரிப்பவர்களாய்.. வெகுஜன ஊடகங்களில் நகச்சுவைக்காக, ஏளனமாய் சித்தரிப்பவர்களாய்...

பார்த்து, புரிந்து, வாழ்ந்து வரும் மக்களிடம் "அரவானிகளின்" வரலாற்றுப் பார்வையை, அவர்தம் வாழ்க்கை உணர்வுகளை, வலியை, மகிழ்வை, தம் வாழ்வனுபவத்தின் வாயிலாகக் கிடைத்த அனுபவங்களை "அரவானிகளின் சமூக வரையியல்" என்ற நூலில் பகிர்ந்து கொண்டிருக்காறர் பிரியாபாபு.

முதலாளித்துவ சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளும் வெடித்துக் கிளம்பியவண்ணம் உள்ளன. இவ்வாறு பீறிட்டுக் கிளம்பும் கோரிக்கைகள், "சராசரி மனிதர்கள்" என்ற சமூகத்தால் கட்டமைக்ப் பட்டவர்களை முதன்மைப்படுத்தியே உள்ளது.

மனவளர்ச்சி குன்றியோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப்ட்டவர்கள் போன்றோரின் பிரச்சனைகள் சமூகத்தில் பொதுப்பிரச்சனைகளாக எடுத்துப் பேசப்படுவது மிக அரிதாகவே உள்ளது. அதிலும் இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட அரவானிகள் குறித்து பொதுச் சமூகத்தின் பார்வை எனெனவாய் உள்ளது? இக் கேள்வி எழுப்ப்படும் சூழலில் பிரியாபாபு எழுதியுள்ள அரவானிகள் குறித்த சமூக வரைவியல் நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.

"பொதுவெளிச்சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப் பிறந்து, உணர்வுகள் மாற்றத்தால் பெண் உணர்வைப் பெற்று, பெண்ணாய்ப் போகிறவர்கள் ஒன்றுகூடி உருவாக்கிய சமூகம் என்றே இந்தச் சமூகம் அடையாளம் காணப்படுகிறது." என அரவானிகள் அடையாளப்படுத்தும் போக்கை எடுத்துக்கூறி "அரவானிகள்" என்ற பெயர் வரக்காரணமாய் இருந்தவரைப்பற்றிக் கூறும்போது வியப்பும், ஆச்சரியமும், மகிழ்வும் மேலோங்குகிறது.

அரவானிகள் தங்களுக்கென்று பழக்கத்தில் பயன்படுத்தும் "பொதுமொழி" குறித்தும், அம்மொழியின் வேர்களையும், மொழிக்கூறுகளையும், அரவானிகளுக்குள் உள்ள சமூக உறவுகளையும், அதற்கான வரலாற்றுக் காரணங்களையும் இந்நூலில் பிரியாபாபு எடுத்துரைக்கின்றார். "அரவானிகள் பிறப்பிற்கு அவர்களின் குரோமோசோம் வேறுபாடுதான் காரணமே தவிர, அவர்களல்ல" எனக்கூறி, அதற்கான அறிவியல் காரணங்கள் இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அரவானியாக மாறுவோருக்கு நடத்தப்படும் "சடங்குகளின்" கடந்தகால அனுபவங்களையும், தற்போதைய நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். அரவானிகள் பொதுவெளியில் வஞ்சிக்கப்படுவர்களாய், தங்களுக்குள்ளே ஒரு தனிப்பட்ட சமூகமாய் இருப்பதையும், அச்சமூகத்தின் உறவு முறைகளை மற்றும் பழக்க வழக்கங்களையும் இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது.

அரவானிகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் எழுத்துக்கள், சிந்தனையோட்டங்கள், தமிழ்ச்சமூகத்தில் பரவலாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அரவானிகளின் சமூக வரையியலை பிரியாபாபு எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியதும் ஆகும். சமூக உணர்வோடு, பொதுச்சமூகத்திற்காய் உழைத்துவரும், உழைக்க் காத்திருக்கும் அரவானிகளை தமிழ்ச் சமூகம் அரவணைப்பதும், அவர்களின் கோரிக்கைகளுக்கு உடன்படுவதும் அவசியம் என்பதை எதார்த்த எழுத்தில் வடித்தெடுத்துள்ளார் பிரியாபாபு.

அரவானிகளின் பால் நிர்ணயம், அரவானி அறுவைச் சிகிச்சைக்கு சட்டப்படியான அங்கீகாரம், திருமணப்பதிவு, குழந்தை தத்தெடுக்கும் உரிமை, பொதுவெளிகளில் அவர்களுக்கு உருய இடம் என நிறைய கோரிக்கைகள் அவர்களுக்கு உள்ளன. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற சமூகத்தின் மற்ற மக்களும் உணர்ந்து உறுதுணையாய் இருக்வேண்டிய அவசியம் என்ற மனநிலையை இந்நூல் ஏற்படுத்துகிறது.

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan