தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெருவெளிப் பெண்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
விசயலட்சுமி, சvijipalani-thehindu@yahoo.co.in
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 65
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 104
ISBN : 8189748467
புத்தக அறிமுகம் :
'பெருவெளி' எல்லைகளற்றது. குறுக்குக் கோடுகளற்றது. சுதந்திரமானது. விடுதலையின் பஞ்சுப்பொதி நிரம்பியது. வார்த்தைகளுக்கு அவசியமற்ற மௌனத்தை அப்பிக் கொண்டிருப்பது. எடையற்றுப் பறத்தலை சாத்தியமாக்குவது. விசயலட்சுமிக்கும் தன் கவிதைப் பயணமே அந்தப் பறத்தலைச் சாத்தியமாக்குகிறது. எடையற்று இல்ல - பெண் மீதான கலாச்சார, நிறுவன, மதங்களின் எடையுடன், பறத்தலை. அப் பறத்தல், கையறுநிலையில் தீனமானதொரு மென்குரலாக அல்லாமல், ஒரு சீற்றத்தை உள்ளடக்கிய உரத்த குரலாக இருப்பதுதான் இங்கே கவனிப்பிற்குரியது. - தமிழச்சி தங்கபாண்ட
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : இந்தியா டுடே
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

வாழ்வின் நிராசைகளையும், தோல்விகளையும், துயரங்களையும் காட்சிப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. பெரும்பாலும் நட்பு, சமூகம், மனித உறவுகள் பற்றிப் பேசுகின்றன கவிதைகள். - - - மே 28, 2008 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan