தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


குழந்தைகளை கொண்டாடுவோம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
அமனஷ்வீலி, ஷ
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
Telephone : 914424332424
விலை : 80
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 158
ISBN : 9788189909116
புத்தக அறிமுகம் :
இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர். இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு. குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கிய காரணிகளாகும். தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தீக்கதிர்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : கி.ரமேஷ்

சமீபத்தில் பாரதி புத்தகாலயமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து வெளியிட்ட 25 நூல்களில் ஒன்று இந்த நூல். இதை எழுதிய அமனஷ்விலி ஒரு பிரபல விஞ்ஞானியும், மனோதத் துவவியலாளருமாவார் அவர் குழந்தைகளை எப்படி அணுக வேண் டும், என்பதை ஆராய்ந்து இந்த நூலை எழுதி யுள்ளார். 1987ம் ஆண்டில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளி யிட்ட இந்தப் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் மறுபதிப்புச் செய் துள்ளது. இன்று நாம் குழந்தைகளை எப்படி நடத்துகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கையில் இந்தப் புத்தகம் காலத்துக்கு உகந்ததாகவே தோன்றுகிறது. இந்தப்புத்தகத்தின் நோக்கங்களை ஆசிரியரே விளக்குகிறார்: முதலாவதாக, குழந்தைகளின் பள்ளி வாழ்வை ஒழுங்கமைக்கும் பொது அணுகுமுறையை விளக்குவதும், இரண்டாவதாக, மிகச் சிறு பள்ளி மாணவர்களை வளர்த்து, கல்வி கற்பிப்பதில் மென்மேலும் புதிய கடமைகளை நிறைவேற்றும் ஆசிரியரின் ஆக்கபூர்வமான முறைகளை விளக்குவதும்தான் முக்கியமான நோக்கங்கள். இந்த நோக்கங்களுக்காக அவர் பல முயற்சிகளை மேற் கொள் கிறார். நடைமுறையில் தவறுகளைத் திருத்திக் கொண்டு மென் மேலும் முன்னேறுகிறார். அவரது முதல் முயற்சியே நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. தமது வகுப்புக்கு வரவிருக்கும் குழந்தைகளின் முகவரியைப் பெற்று அவர் களுக்கு வரவேற்பு அட்டைகள் அனுப்புவதும், அவர்களது புகைப் படங்களைப் பெற்று அவர்களை அடையாளம், பெயர் தெரிந்து கொண்டு வரவேற்பதும் இதுவரை கேள்விப்படாத நடைமுறைகள். நாம் எப்படி புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அனுப்பு கிறோம் என நினைத்துபார்க்கையில் பெருமுச்சு வருகிறது. ஆசிரியர்கள் டயரி எழுதுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கி றோம். ஆனால் இவரோ நொடிக்கு நொடி திட்டமிடு கிறார். குழந் தைகள் பள்ளிக்கென 7சதவீதம் மட்டுமே செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டு விடுகிறார். குழந்தைகளுக்கு எப்படி வணக்கம் கூறி வரவேற்பது என் பதைத் திட்டமிடும் பாங்கு பாராட்டுக்குரியது. தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்தவும், அவர்களை தம் வழிக்குக் கொண்டுவரவும், தாமே தவறு செய்வது போல் நடித்து அவர்களைச் சரி செய்வது பாராட்டுக்குரிய முறை. இசையை அவர் களுக்குச் சொல்லித்தர பெற்றோரையே உபயோகிப்பதும், அவர் களால் எந்த விதத்தில் உதவ முடியுமோ அந்தவிதத்தில் உதவ வைப்பதும் நல்ல வழி முறைகள். குழந்தைகளை நோட்டுப் புத்தகத்தில் கையொடிய எழுத வைத்து மனப்பாடம் செய்ய வைக்கும் நடைமுறைக்கு மாறாக, அட் டைகளை உபயோகித்து அவர்களையே கற்கத் தூண்டுவதும் நல்ல முறை. இதுவரை நாம் யோசித்திராத மற்றொரு கோணத்திலும் இவர் சிந்தித்திருக்கிறார். அது சிகப்பு மையை உபயோகிப்பது எந்த அளவு குழந்தைகளை பாதிக்கிறது என்பது: அதற்குப் பதில் பச்சை மையில் குழந்தைகள் நன்கு எழுதியவற்றைப் பாராட்டி எழுதலாமே என்ற யோசனை சிந்தனைக்குரியது. அவரது வார்த்தைகளுடனே நாமும் முடிப்பது பொருத்தமாக இருக்கும். குழந்தைகளை ஆசிரியர்கள் முழுமனதோடு நேசிக்க வேண் டும். இவர்களை இப்படி நேசிக்க, இந்த நேசத்தை எப்படி வெளிப் படுத்த வேண்டுமென இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண் டும். ஒவ்வொரு பள்ளி நாளையும் ஒவ்வொரு பாட வேளையையும் ஆசிரியர் குழதைகளுக்கான பரிசாக யோசித்து செயல்பட வேண் டும்: குழந்தைகள் ஆசிரியரிடம் ஒவ் வொரு முறை கலந்து பழகும் போதும் மகிழ்ச்சியையும் எதிர் கால நம்பிக்கையையும் அவர்கள் மனதில் தூண்டப்பட வேண்டும். இந்தப் புத்தகம் எல்லா துவக்கப்பள்ளி ஆசிரியர்களும், சிறு குழந்தைகளின் பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்று. - - - 2008.03.07 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan