தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புதிய உலகம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
முத்து மீனாட்சி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
Telephone : 914424332424
விலை : 35
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 88
புத்தக அறிமுகம் :
இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. பிரேம்சந்த், யஷ்பால், ராம்தரஷ், வியோகிஹாரி, கேசவதேவ், இஸ்ராயில் ஆகியோரின் எட்டு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய இலக்கிய உலகை அறிந்துகொள்ள இக்கதைகள் மிகவும் முக்கியம்.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தீக்கதிர்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : அ.குமரேசன்

பழசிலிருந்து ‘புதிய உலகம்’ திசைகளோடி தேட வேண்டிய திரவியங்களில் முக்கியமான ஒன்று இலக்கியம். எல்லைகள் தாண்டி பரிமாறப் படும் இலக்கியம் அந்த எல் லைகளின் இறுக்கங்களைத் தகர்த்து, பொது உண்மை களின் மூலம் மனிதர்களின் பொது அடையாளங்களை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்டதோர் அரும் பணியைச் செய்கிறது ‘புதிய உலகம்’ என்ற இந்தச் சிறு கதைத் தொகுப்பு. பாரபட்சத் திற்கு உள்ளாகும் ஆரவார மின்றி மொழிபெயர்ப்பு இலக் கிய சேவை செய்துவருபவர் முத்து மீனாட்சி. தமுஎச மூத்த படைப்பாளி காஸ்யபன் இவ ரது துணைவர். இந்தி மொழிச் சிறுகதைகளை, ஆங்கில வழி யாகச் செய்யாமல், இந்தியி லிருந்தே தமிழுக்குத் தருபவர் முத்து மீனாட்சி. இதனால், படைப்பின் மூல உணர்வோடு வாசகர்கள் கூடுதலாகக் கலக்க முடிகிறது. பகத்சிங்கின் தோழர் யஷ்பால், முற்போக்கு இந்திச் சிறுகதையின் பிதாமகன் பிரேம்சந்த், விடுதலைப் போராட்டக் கால படைப்பாளி வியோகிஹிரி, பீகார் செங் கொடி இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்ட இஸ்ரா யில், தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராம்தாஸ் மிஸ்ரா, மலையாள எழுத்தாளர் கேசவ தேவ் ஆகியோரின் 9 கதைகள் தொகுப்பில் உள்ளன. பதிப்பு லகில் தனித்தடம் பதித்துவிட்ட பாரதி புத்தகாலயம் இப் படைப்புகளை அர்த்தமுள்ள அட்டைப் படத்தோடு வழங்கி யிருக்கிறது. புத்தகத் தலைப்பாகவே அமைந்த கதை யஷ்பால் எழு தியது. நாடு அரசியல் விடு தலைக் காற்றை சுவாசிக்கத் தொடங்குவதற்குப் பல ஆண் டுகள் முந்தைய கதை. ஒரு பக்கம் விடுதலை இயக்கம். இன்னொரு பக்கம் தொழிலா ளர் வர்க்க இயக்கம். சுதேசித் தொழில் என்ற பெயரால் தொழிற்சாலை நடத்திக் கொண்டே, தொழிலாளர் களை ஒட்ட உறிஞ்சிய அன் றைய முதலாளிகள். பிரிட்டிஷ் அரசுக்கோ, வர்க்க அடிப் படையில் மட்டுமல்லாமல் அர சியல் அடிப்படையிலும் தொழி லாளர் இயக்கத்தை வளர விடக்கூடாது என்ற வெறி. அதே போல் விடுதலைக்காகப் போராடினாலும் வர்க்க அடிப் படையிலும் அரசியல் அடிப் படையிலும் தொழிலாளர் இயக்கத்தை வளரவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு இருந்த தேசிய இயக்கத்தின் முரண். இவை அனைத்தும் கலந்த அன்றைய அரசியல் - சமுதாய-பொருளாதார சூழலை மூன்றே கதாபாத்திரங்களின் ஊடாடல் மூலமாக நம் கண் முன் நிறுத்துகிறது கதை. இஸ்ராயிலின் ‘வித்தியா சம்’ கதை வேறொரு கோணத் தில் வர்க்க வேறுபாட்டைக் காண்கிறது. உரிமைக்காகப் போராடியதால் நிலப்பிரபுக் களின் தாக்குதலுக்கு உள்ளா கிப் படுகாயமடைந்த விவசாயி களின் வலி ஒரு புறம். பூதான இயக்கத்தைப் பெரிதாக நம்பி பின்னர் யதார்த்த நிலை மையை செரிக்க முடியாத ஒருவரின் இயலாமை வலி. ராம்தாஸ் மிஸ்ராவின் ‘பொட்டப்புள்ள’ கதை, அந் நிய அடிமை விலங்கொடித்த இந்தியாவில் பெண்ணடிமை எனும் விலங்குத்தனம் குழந் தைப் பருவத்திலேயே மாட்டப் படுவதைக் காட்டுகிறது. சிறுமி சாவித்திரி தன் மீதான பாரபட் சத்தை “நான் பொட்டப் புள்ளையல்லவா” என்று சாதா ரணமாகக் எடுத்துக் கொள் ளும் கட்டாயப் பயிற்சி மனதை உலுக்குகிறது. எல்லாக் கதைகளுக் குமே இலக்கு ஒன்றுதான் - பழைய உலகத்தை அம்பலப் படுத்தி, புதிய உலகத்தை உருவாக்கும் முனைப்பைக் கூர்தீட்டுவதுதான் அந்த இலக்கு. அந்த பொது இலக்கு பற் றிய உணர்வை ஏற்படுத்து வதில் மொழிபெயர்ப்பாளர் வெற்றி பெறுகிறார். முத்து மீனாட்சியின் இலக்கிய ஈடு பாடும், இலக்கிய நோக்கம் பற்றிய தெளிவும் கதைகளின் தேர்விலேயே புலப்படுகிறது. உரையாடல்களில் இலக்கண நடையும் இயல்பான பேச்சு நடையும் மாறி மாறி வருகின் றன. ஒரு இந்திக் கதையில் “தை மாதம்” என்று குறிப்பிடப் படுகிறது. அதை இந்தியில் எப் படிச் சொல்வார்களோ அப் படியே பயன்படுத்தியிருக்க லாம். அடுத்தடுத்த முயற்சிக ளில் இவை மேலும் நேர்த்தி பெறும் என எதிர்பார்க்கலாம். தமிழிலிருந்து மற்ற மாநில மொழி வாசகர்களி டையே தமது நாவல்களின் மூலம் அறிமுகமான கு. சின் னப்பபாரதி தமது அணிந்துரை யில் “தமிழ் இவரிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பது நியாயம் தானே” என்று குறிப்பிட்டிருப் பது சரிதானே! - - - 2008.03.21 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan