தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


யாதும் ஊரே
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
இலக்குவன், தெtlaksh@sancharnet.in
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 190
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 436
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
குறைவான கற்பனைகளுடன் யதார்த்த வாழ்க்கையை விரிவாகக்கூறும் நாவல். நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் நாவலினுடே சொல்லப்படுகின்றன. இந்நாவலின் மூலம் அச்சமூக மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடு போன்ற பல விடயங்களை வாசகர்கள் அறிந்துகொள்ளலாம்.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தமிழ் இலெமுரியா
மதிப்புரை வழங்கியவர் பெயர் : மூனாதானா

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயற்சித்தால், வாழ்க்கையில் பிரச்சனைகள் குறைவாக இருக்கும் என்பது இந்த நூலின் அடிநாதம் என்கிறார் ஆசிரியர். உண்மைதான். "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றாரே அடுத் வரியில் கணியன் பூங்குன்றன். நாள் குறிப்புகள் போல எழுதப்பெற்றுள்ள இந்த நூலில், நடைமுறை நிகழ்வுகளே ஏராளம் இடம்பெற்றுள்ளன. கற்பனை கலக்காமல் நடந்தவற்றை நினைவில் நிறுத்தி விரித்துக் கூறும் வாழ்வியல் இயல்புகள் என்றே கூறலாம். பயணங்களால்தான் மனிதர்களையும், ஊர்களையும், திசைகளையும் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. தன் சிந்தனையையும் எண்ணங்களையும் பத்தொன்பது அத்தியாயங்களில் பல்வேறு செய்திகளை எளிமையான இனிமையான தமிழில் பதிவு செய்துள்ளார். செட்டிநாட்டுத் தமிழின்பத்தை கதைத்தலைவன் செட்டியப்பனாய் உலாவி, தனித்த பார்வையில் படம் பிடித்துள்ளார். தாம் நேரில் கண்ட, கேட்ட தகவல்களை ஆவணப்படுத்திக்கொள்ளும் வகையில் "எழுதியது பெரிதல்ல வெளியிடுவதுதான் பெரிது" எனப் பெருமையோடு வெளிக் கொணர்ந்துள்ளார் இந்நூலை. புதினப் புதையலாய் விளங்கும் இந்த நூலில் உள்ள கருத்துக்கள் ஒவ்வொரு மனிதரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய பெட்டகமாகும். ஒவ்வோர் இல்லத்திலும் இருக் வேண்டிய, அடுத்தவர்களுக்குப் பரிசளிக்க உகந்த நூல். - - - ஆகஸ்ட் 2008 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan