தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தொலைக்காட்சி உலகம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
சமத்துவன், பவாsamathuvan@yahoo.com
பதிப்பகம் : புதுயுகம் செய்முறை செம்மையாக்கம்
Telephone : 914428515051
விலை : 300
புத்தகப் பிரிவு : திரைக்கல்வி
பக்கங்கள் : 555
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தொலைக்காட்சி ஊடகத்தை அறிந்து, ஆழமாகப் புரிந்து, ஆட்கொண்டு அதனைச் சமூகமேம்பாட்டிற்கான கருவியாக மாற்றும் கலையை நூல் வடிவில் தந்துள்ளார். இத்துறையிங் வந்துள்ள முழுமையான முதல்புத்தகம் இதுவாகும். துறைசார் அறிவைத் தருதல் என்பதாக மட்டுமல்லாமல் சாமானியர்களுக்கும் எளிதாகப் புரியும் தன்மையுடன் தந்திருப்பது இந்நூலின் சிறப்பாகும்.
ஊடக மதிப்புரைகள்
1 2
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : துக்ளக்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : பரகத்

500 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்நூலில், எந்த ஒரு பக்கத்தைப் பிரித்தாலும், அதை வரி விடாமால் படிக்கத் தூண்டும் தொலைக்காட்சி தகவல் களஞ்சியமாக இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். உலகில் தொலைக்காட்சி எங்கு தோன்றி, எப்படி வளர்ந்தது என்ற வரலாறு முதல், இந்திய தொலைக்காட்சித்துறையும், அதன் சட்ட வரையறைகளும் உருவானது; தொலைக்காட்சி நிறுவனத்தை எப்படித் துவங்குவது ; அதனை நிர்வகிப்பது ; நிகழ்ச்சிகளை எழுதுவது ; இயக்குவது ; நகழ்ச்சிகளுக்குரிய பங்காளர்களை பாத்திரத்திற்கேற்ப தேர்வு செய்வது ; செய்தி ஆக்கம் ; தயாரிப்புச் செலவுகள் ; கேமிரா ; ஒளி அமைப்பு ; படத்தொகுப்பு ; கம்ப்யூட்டரின் பங்கு ... என்று இத்துறை தொடர்பான அனைத்து விவரங்களையும் சிறந்த புகைப்படங்களோடு, தொழில்நுட்ப ரீதியாக விவரித்துள்ளார். இத்துறையில் 15 வருட காலத்தில் பல ஆக்கங்களைத் தந்து, பல விருதுகளையும் பாரட்டுக்களையும் பெற்றுள்ள இந்நூலிசிரியர், தனது நேர்த்தியான அனுபவத்தினால் இத்துறை ஆர்வலர்களுக்கு முதன் முதலாக தமிழில் ஒரு முழுமையான வழிகாட்டி நூலை வடித்துள்ளது சிறப்பானது. - 30.10.2007 -

1 2

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan