தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சமூக வானொலி
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
ரஸ்மின், எம்.சி
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
Telephone : 94112321905
விலை : 500.00
புத்தகப் பிரிவு : ஊடகம்
பக்கங்கள் : 208
ISBN : 9789556850017
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

பொருளடக்கம்

  • சமூகவானொலியின் பணிகளும் செயற்பாடுகளும்
  • சமூகவானொலியின் பண்புக்கூறுகள்
  • சமூகவானொலி ஏன் தேவை?
  • அபிவிருத்தி, தொடர்பாடல், பங்கேற்றல்மற்றும் மகாவெலி சமூகவானொலி
  • இலங்கையில் சமகால சமூக வானொலிகள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள்
  • இலங்கையில் இணையத்தள சமூக வானொலிகளின் நன்மைகளை மக்கள் மயப்படுத்துதல் - சவால்களும் வாய்ப்புகளும்
  • ஆணாதிக்க கட்டமைப்புகளும் பெண்விருத்தியும் - சமூகவானொலியை மையமாகக் கொண்ட நோக்கு
  • சமூக ஒலிபரப்புக்கு கிளைமொழி வழக்கினைப் பயன்படுத்துதல் -  ஒரு நோக்கு
  • அபிவிருத்திக்கான தொடர்பாடலும் சமூக வானொலியும்
  • இலங்கையில் சமூக வனொலிகள் - சிறு அறிமுகம்
  • மக்கள் சேவை ஒலிபரப்பும் பன்முக தொடர்பாடலும் - ஓர் அறிமுகம்

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சமூக வானொலி எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை விளக்கும் ஒரு நூல்கூட இதுவரை இலங்கையில் வெளியிடப்படவில்லை. சில உதிரியான கட்டுரைகள் சிங்களத்திலும் தமிழிலும் வெளிவந்தபோதும் சமூகவானொலியை ஒரு துறையாகக் கற்பதற்கு அவை எந்தவிதத்திலும் போதியவையல்ல. தாய்மொழியில் ஊடகக்கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன்கருதியே இத்தகைய ஒரு நூலை எழுத வேண்டியேற்பட்டது. 

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ஊடகம், அபிவிருத் திக்கான தொடர்பாடல் என்பன கடந்தபல ஆண்டுகளாக போதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்கும் பணியும் பற்றிய அலகுகள் திருப்திப்படக்கூடிய நிலையில் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் உள்ளூர் மயமாக்கத்துடன் அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கான தொடர்பாடல் போன்ற எண்ணக் கருக்கள் புதிய பரிணாமங்களைப் பெற்றுவருகின்றன. தகவல்களை மிகவிரைவில் கிராமிய மக்களுக்குக் கொண்டுசெல்லும் தொடர்பாடல் உத்திகள் பல கோணங்களிலிருந்தும் முன் மொழியப்படுகின்றன. இது சமூகவானொலி பற்றிய கற்கையை மேம்படுத் துவதற்கான சரியான தருணமாகும். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan