தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தோல்விகளின் ஒப்புதல்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
வைகறை
பதிப்பகம் : சாளரம்
Telephone : 919445182142
விலை : 250.00
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 280
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

1986 முதல் 1990 வரையான காலப் பகுதியில் வெளிவந்த நட்புறவுப் பாலம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஆகும். உலக மானுடத்தின் வலிகளையும் காயங்களையும் கட்டுரைகளாகப் பதிவு செய்கிறது இந்நூல். மேலும் இந்தத் தொகுப்பில் தமிழில் நேரடியாக எழுதப்பட்ட கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் உள்ளன. 

உள்ளடக்கம் 
 • 1857 முதல் சுதந்திரப் போர் - சுதா
 • புதிய என்ற வார்த்தையோடு வரும் பழைய கல்விக் கொள்கை - டாக்டர் ப.சிவகுமார்
 • விழிதெழுந்தவர்கள் - சுகுமார்பேனா ஏந்தியிருக்கும் என் கைகளில் எந்திரத் துப்பாக்கியையும் ஏந்தியிருக்கிறேன் ( பிலிப்பைன்ஸ் கவிஞர் இமானின் போராட்ட வாழ்க்கை ) - ஜே.சாந்தாராம்
 • காந்தியம் முடிவான உண்மையல்ல ( எம்.வி.வெங்கட்ராம் நேர்காணல் ) - ஜே.சாந்தாராம்
 • பாசிஸ்ட் ஹிட்லருக்கு காந்தியின் அகிம்சை போதனைக் கடிதம் - தமிழில் வி.கெ.பாலகிருஷ்ணன்
 • திரை விமர்சனம் - ப்ளாட்டூன் ( வியட்நாம் போரை விளக்கும் திரைப்படம் )
 • மார்க்ஸ் என்னும் இலக்கியவாதி - தியாகு
 • அடக்குமுறைகள் எங்கெங்கு நடந்தாலும் என் ஓவியங்கள் எதிர்த்துப் பேசும் - ஓவியர் சந்தானம்
 • சந்தானத்தின் ஓவியக் கலை ( மலையாளத்தில் சி.கெ.ராமச்சந்திரன் ) தமிழில் வி.கெ.பாலகிருஷ்ணன்
 • தென்னாபிரிக்க வெள்ளையர் பற்றிய நூல் : காத்திருத்தல் - ஆ.இரா.வேங்கடாசலபதி
 • திரை விமர்சனம் : கொட்டி வலிகய ( போராளிகள் பற்றிய ஒரு சிங்களத் திரைப்படம் ) - பொன்.பூலோகசிங்கம்
 • ரொமேஷ் பண்டாரி நிலைப்பாடு : இன்னலுற்ற ஈழத் தமிழர்களை மேலும் இன்னல்பட வைத்தது ( ஆங்கிலம் பிரபுல் பிட்வாய் ) - தமிழில் ஜே.சாந்தாராம்
 • ஒரு நேர்காணலில் ஜெயகாந்தன் - கி.பி.அரவிந்தன்
 • பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதம் : தற்கொலை கோழைத்தனம் - தமிழில் சமந்தா
 • நாட்டுப்புறக் கலைகள் : செ.யோகநாதன்
 • தோல்விகளின் ஒப்புதலை எழுத ஆரம்பித்தேன் - முல்க்ராஜ் ஆனந்த் தமிழில் வி.கெ.பாலகிருஷ்ணன்
 • பௌத்த சிங்களரும் சிறுபான்மையினரும் : கல்லறை ஒன்றுக்கு ஆசிரியர் வெள்ளை அடித்துருக்கிறார் - கி.பி.அரவிந்தன்
 • ஈழத்து பெண் கவிஞர்களின் சொல்லாத சேதிகள் : இவர்கள் கவிதைகளில் சோகச் சிரிப்பும் கோப நெருப்பும் வெடிக்கிறது - மெய்.இரெ.பொற்கொடி
 • ஹோமர் : வாழ்க்கை இதிகாசம் - விமர்சனம் - ப்ரகாஷ்
 • முகில்களின் மீது நெருப்பு - கி.பி.அரவிந்தன்
 • தமஸ் ; தொலைக்காட்சித் தொடர் பற்றி - பிசம் சகானி
 • விக்கிரமாதித்யனின் உள்வாங்கும் உலகம் - ஆர்.சிவகுமார்
 • மதினிமார்கள் கதை - தமிழில் மீண்டும் கதைசொல்பவனின் வருகை - நாகார்ஜுனன்
 • தோழனே ! லெனினே ! - கி.பி.அரவிந்தன்
 • சிறுகதையில் அக்கரைக்கு இக்கரை - இந்திரன்
 • கதைச்சிற்பி சரத்சந்திரர் : விமர்சன நூலாக அமைந்திருக்க வேண்டும் - ப்ரகாஷ்
 • யாழ்ப்பாணம் பற்றிய சிறந்த ஆய்வு நூல் - ஆர்.நாகசாமி தமிழில் லியோ ரொட்ரிக்கோ
 • அம்சா ஆலவியின் கற்பனை வகைப்பட்ட பொய்யான புனைச்சுருட்டு - சி.அறிவுறுவோன்
 • தகழிக்கு ஞானபீடப் பரிசு : இனி மலையாளத்திற்கு ஞானபீடப் பரிசு கிடையாது - ப்ரகாஷ்
 • மதுரையில் ஒரு நாடகக் கலைவிழா - மெய்.இரெ.பொற்கொடி
 • பாலஸ்தீனத்தில் பொங்கியெழும் மக்கள் போராட்டம் ( ஜெருசேலமிலிருந்து ஒரு கடிதம் - மில்டன் பியர்ஸ்ட் ) - தமிழில் நாகார்ஜுனன்
 • நெல்சன் மாண்டெலா - தியாகு
 • ஆதிமூலம் - வீரசந்தானம் - மருது என்ற தமிழக் கலைவழி - ப்ரகாஷ்
 • தமிழ்நாட்டில் தமிழைக் காணமுடியவில்லை ( சீன தேசத் தமிழறிஞர் சாங்-சி-லின் வருத்தம் ) - நேர்காணல் மதிவாணன் - செல்வபாண்டியன்
 • பகத்சிங்கும் சுபவீயும் - ஆ.இரா.வேங்கடாசலபதி
 • குர்திஷ் கவிஞன் ஜெர்கோ பெகாஸ் தமிழில் எஸ்.வி.ஆர்
 • புகழேந்தியின் உருவச் சிதைப்பு ஓவியங்கள் - சுந்தர்ஜி
 • நெல்சன் மண்டேலா அறைகூவல் : இன ஒதுக்கல் ஆட்சி பீடத்தை நொருக்கி எறிவேம் - தமிழில் சமந்தா
 • விடுதலை செய் ! விடுதலை செய் ! நெல்சன் மண்டேலாவை விடுதலை செய் ( மலையாளத்தில் வி.எம்.இராமசிசந்திரன் ) - தமிழில் கே.எம்.வேணுகோபால்
 • க.நா.சு. வும் தமிழ் இலக்கியச் சூழலும் - ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
 • கவிதை ஆக்கம் - விக்கிரமாதித்யன்
 • ரஷ்யப் புரட்சியின் இலக்கிய சாட்சியமும் குறுக்கு விசாரணையும் - ஆ.இரா.வேங்கடாசலபதி
 • மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டும்தானா ? -  சி.அறிவுறுவோன்
 • லூசுன் கவிதைகள் - துரை.சீனிச்சாமி
 • காலவெளியில் பெண்களின் சுவடுகள் - வ.கீதா
 • அரங்கம் வழ்ங்கிய சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை - இயக்குநர் இரா.இராசு
 • சமயச் சார்பற்ற நாடகங்கள் என்றால் என்ன - சப்தர் ஹாஷ்மி
 • சிறுகதை நவீனமனிதனின் குரலாகக் கேட்கிறது - தொ.பரமசிவம்
 • பாரதிதாசன் - ஆய்வுக் கோள்கள் - தியாகு
 • 1990 ஏப்ரல் 29 - பாரதிதாசனின் நூற்றாண்டுத் தொடக்கம் : கற்பூரச் சொற்கோ : பாரதிதாசனாரின் வாழ்க்கை வரலாறு - தியாகு
 • கற்பூரச் சொற்கோ : வ.சுப்பையா பார்வையில் பாவேந்தர் - தியாகு
 • கற்பூரச் சொற்கோ : பாரதி வழியில் பாவேந்தர் - தியாகு
 • பாட்டுக்குரிய களத்தையும் காலத்தையும் நோக்கியாக வேண்டும் - தியாகு
 • கலையென்பது எளிதில் இனங்கான முடியாதது - சி.எம்.முத்து
 • நிகராகுவா : சில படிப்பினைகள் : அரசியல் அதிகாரம் புரட்சியாளர்களிடம் இருக்க முக்கிய உற்பத்திச் சாதனங்கள் எதிர்புரட்சி வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தன - எஸ்.வி.ராஜதுரை
 • சவப்பெட்டியில் நான் - கவிஞர் ஆப்ரஹாம் ஸ்ட்ஸ்கேவெர் - தமிழில் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
 • அரசியல் குளறுபடிகளிலிருந்து மனிதாபிமானத்தைக் காப்பதே பெரிய கேள்விதான் ( சிரியன் எழுத்தாளர் பேராசிரியர் ஓம்ரான் டாலிப் ) நேர்காணல் : நஸீரா சர்மா தமிழில் ஆ.ஜா.கான்
 • நவீன ஓவியம் : சாவு குறித்து எனது எண்ணங்களையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ளும்வரை வாழப்போகிறேன் - சா.தேவதாஸ்
 • இளையவனின் காணி உறுதி : படிப்பினைகளையும் அனுபவங்களையும் சிறுகதைக் கலையாக மாற்றுவதில் இளையவன் வெற்றி பெற்றுள்ளார் - தி.க.சி
 • இந்தியாவில் அதிகாரம் பற்றிய புரிதல் யாது ? - நிர்மல் கோஸ்வாமி - தமிழில் கவிதா
 • தோழர் ஹோசி மின் : நினைவு கூரப்படவேண்டிய புரட்சியாளர் - கோ.கேசவன்
 • அன்புள்ள வின்சென்ட் வான்கோ - சுகுமாரன்
 • சந்தியாராகம் : அந்திமத்தில் சூரியோதயம் - அம்ஷன் குமார்
 • சோழர்காலத்தில் தமிழும் பௌத்தமும் - சுவீடன் பேராசிரியர் பீட்டர் சல்க் நேர்காணல் -  நாகார்ஜுனன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan