கோரல்டிரா மென்பொருளின் செயல்முறை பயிற்சிக்காக தனியாக புத்தகம் தமிழில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். கோரல்டிரா மென்பொருளில் கோலம் போடுவது, பல்சக்கரம் உருவாக்குவது, முப்பரிமாண நட்சத்திரம் வரைவது, நிழல் அமைப்பு கொடுப்பது, ஹாஃப்டோன் எஃபெக்ட் கொடுப்பது, எம்பளம் உருவாக்குவது, போட்டோ மான்டேஜ், தானாகவே பக்க எண் கொடுத்தல் - என்பன உள்ளிட்ட 29 தலைப்புகளில் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் படங்களுடன் விரிவான விளக்கமாகத் தரப்பட்டுள்ள இந்தப் பயிற்சிகளுக்கான வீடியோ பட விளக்கம் குறுவட்டில் கொடுக்கப்படுவது இந்தப் புத்தகத்தின் தனி சிறப்பாகும். ஆம், அனைத்து விளக்கமும் நேரடியாக கோரல்டிரா மென்பொருளிலேயே உருவாக்கும்/செயல்படும் வழிமுறையை தமிழில் சொல்லித்தரும் வகையில் தரப்பட்டுள்ளன.
இந்தக் குறுவட்டை உங்கள் கணினியில் பொருத்தி, விண்டோஸ் மீடியா பிளேயர் மூலம் பார்த்தும் கேட்டும் முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.