தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
இராமநாதன், பி
பதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம்
Telephone : 914424339030
விலை : 75
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 118
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Russian
மூல ஆசிரியர் : Alexander Kondrov
புத்தக அறிமுகம் :
சோவியத் அறிஞர் அலெக்சாண்டர் காந்திராவ் அவர்கள் எழுதிய ஆய்வு நூலின் தமிழாக்கம்
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தமிழ்ப்பாவை
மதிப்புரை வழங்கியவர் பெயர் : அருளாளன்

இந்த நூலின் மூல ஆசிரியரே தென்பகுதியான கண்டம். இந்தியாவிற்குள் ஆரியர் நுழைந்த முற்காலகட்டத்தில் தங்களைப் பூசுரர், வாழும் தெய்வங்கள் என்று அழைத்துக்கொண்ட பிராமணர் கை ஓங்கியிருந்து; ஆற்றல்வாய்ந்த பேரரசர்கள் உட்பட அனைத்து அரசர்களுக்கும் தாம் மேலானவர்கள் என்று கூறிக்கொண்டனர். ஆரியர்க்குக் கீழ்ப்பட்ட மக்கள் சிந்துவெளி மக்கள் தங்கள் சமய நம்பிக்கையை கமுக்கமாக ஒழுகு வந்தனர்.6ம் நூற்றாண்டில் தான் அந்தப் பழைய சம்பவங்கள் வெடித்துச் சிதறி, அவற்றின் அடித்தளமாகக் கொண்டு உருவானதுதான் பௌத்தம், சமணம், இந்துமதம் ஆகிய சமயங்கள் என்றும் தொல் திராவிட மொழிபேசுநர் பரவியது தெற்கிலிருந்து வடக்கு நோக்கியேயாகும். (பக் 15, 17) திராவிட மொழி பேசுநர் பண்டு தெற்கிலிருந்து வடக்காகப் பரவிய பொழுது (Dravidian Ascent) குடியேறிய பகுதியே சிந்துவெளி நாகரிகப் பகுதி என்றும் ஆசிரியர் நுண்மான் நுழைபுலத்துடன் தமிழகத்திற்குப் படைத்துள்ளார. - - - இதழ் 237; 2006.10.01 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan