கற்றுக் கொடுப்பவர்களாலேயே மனித இனத்தின் வளர்ச்சி சாத்தியமாகிறது. தமிழ்நாட்டில் கணினி வரைகலைப் படப்பயிற்ச்சி, குறிப்பாக கிராபிக்ஸ் மற்றும் 3D அனிமேஷன் தொடர்பான மென்பொருளைக் கற்பிக்கும் எக்ஸ ஒய் இசட் ஆக்சிஸ் ( XYZ Axis ) என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்திவரும் திருமதி ஆர்.அன்பரசி இத்துறையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். மல்டிமீடியாத் துறையில் ஆயிரக்கணக்கான கிராபிக் டிசைனர்களையும், 3D அனிமேட்டர்களையும் உருவாக்கியவர். உருவாக்கி வருபவர். படைப்பாற்றல் திறனுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் மல்டிமீடியா பயிற்சியை சிறப்பாகக் கற்றுத்தரவேண்டும் என்பதில் முழு முனைப்பு காட்டி வருபவர். இவரிடம் பயின்றவர்கள் பலர் பெரிய வரைகலை நிறுவனங்களில் பணி புரிந்துகொண்டிருக்கிறார்கள். மாயா மென்பொருள் மாடலிங் பற்றிய புத்தகம் ஒன்றை இவர் எழுதியுள்ளார். இது அவருடைய முதல் புத்தகமாகும்..