வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
சருமம்=தோல்
சருவம்=எல்லாம்
சரோசம்=தாமரை
சர்வகலாசாலை=பல்கலைக்கழகம்
சர்வமானியம்=இறையிலி
சர்வேஸ்வரன்=எப்பொருட்கும் இறைவன்
சலசம்=தாமரை
சலசந்தி=கடலிணைக்கால்
சலசாட்சி=தாமரைக்கண்ணி
சலம்=நீர்
ஜலம்=நீர்
சலதோஷம்=நீர்க்கோவை
சலநம்=அசைவு
சல்லாபம்=உரையாடல்
சவம்=பிணம்
சனம்=மக்கள்
சனம்=நரல்
ஜனம்=மக்கள்
ஜனம்=நரல்
சனனம்=பிறப்பு
சன்மம்=பிறப்பு
சனி=காரி
சன்மார்க்கம்=நன்னெறி
சன்மானம்=பரிசு
சன்னல்=பலகணி
சாகரம்=கடல்
சாக்கிரதை=விழிப்பு
சாக்கிரதை=உன்னிப்பு
சாக்கிரதை=எச்சரிக்கை
சாக்கிரம்=நனவு
சாகை=தங்குமிடம்
சாகை=வீடு
சாசனம்=முறி
சாசுவதம்=அழியாமை
சாசுவதம்=அசையா நிலை
சாசுவதம்=உறுதி
சாசுவதம்=வீடுபேறு
சாடி=தாழி
சாட்சி=சான்று
சாட்சி=கரி
சாஷ்டாங்கம்=எட்டுறுப்பு
சாதகம்=பயிற்சி
சாதகம்=பிறந்தநாட் குறிப்பு
சாதகம்=உதவி
சாதகம்=காரியங்கைகூடல்
சாதம்=சோறு
சாதனம்=கருவி
சாதனம்=இடம்
சாதனம்=பயிற்சி
சாதனம்=உறுதிமுறி
சாதனம்=அடையாளம்
சாதனம்=முயற்சி கைகூடல்
சாதாரணம்=பொது
சாதி=இனம்
சாதி=குலம்
சாதி=வகுப்பு
சாதித்தல்=நிலைநிறுத்தல்
சாதியாசாரம்=குல ஒழுக்கம்
சாது=துறவி
சாதுரியம்=திறமை
சாதுரியம்=வன்மை
சாத்திரம்=கலை
சாத்திரம்=நூல்
சாத்மிகம்=அமைதித்தன்மை
சாத்துவிகம்=அமைதித்தன்மை
சாந்தம்=அமைதி
சாந்தம்=பொறுமை
சாந்திரம்=நெருக்கம்
சாந்திரம்=திங்கட்டொடர்புடையது
சாபம்=தீமொழி
சாபம்=வசவு
சாபம்=வில்
சாமர்த்தியம்=வல்லமை
சாமர்த்தியம்=திறமை
சாமர்த்தியம்=கூறுபாடு
சாமான்=பொருள்கள்
சாமான்=தட்டுமுட்டுகள்
சாமி=கடவுள்
சாமி=தலைவன்
சாமி=அடிகள்
சுவாமி=கடவுள்
சுவாமி=தலைவன்
சுவாமி=அடிகள்
சாமீப்பியம்=சிவனருகிருப்பு
சாயை=நிழல்
சாயுச்சியம்=சிவப்பேறடைவு
சாரதி=வலவன்
சாராம்சம்=சிறந்த பகுதி
சாரீரம்=இனிய குரல்
சாரீரம்=இன்னிசை
சாரீரம்=உடற்றொடர்பு
சாரூபம்=சிவனுருவம்
சாலோகம்=சிவவுலகு
சாவகாசம்=ஒழிவு
சாவகாசம்=ஓய்வு
சாவகாசம்=வசதி
சாவகாசம்=விரைவின்மை
சாவதானம்=ஒழிவு
சாவதானம்=ஓய்வு
சாவதானம்=உன்னிப்பு
சிகரம்=தலை
சிகரம்=மலை
சிகரம்=உச்சி
சிகரம்=முகடு
சிகரம்=குவடு
சிகிச்சை=மருத்துவம்
சிகிச்சை=பரிகாரம்
சிகித்சை=மருத்துவம்
சிகித்சை=பரிகாரம்
சிகை=குடுமி
சிகை=கூந்தல்
சிங்கம்=அரிமா
சிங்கம்=ஏறு
சிம்ஹம்=அரிமா
சிம்ஹம்=ஏறு
சிங்காசனம்=அரியணை
சிங்காரம்=ஒப்பனை
சிங்காரம்=திருத்தம்
சிங்காரம்=அழகு
சிங்குவை=வாய்
சிசு=குழந்தை
சிசு=மகவு
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 71 பொருள் விளக்கச்சொற்கள் : 104
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333