வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
பிரசவம்=பிள்ளைப்பேறு
பிரசவம்=கருவுயிர்ப்பு
பிரசாதம்=கடவுளுணா
பிரசாதம்=தேவுணா
பிரசாதம்=படைப்பு
பிரசாதம்=அருள்
பிரசாரம்=பரப்புதல்
பிரசித்தி=வெளிப்படை
பிரசித்தி=அறிவிப்பு
பிரசித்தி=புகழ்பரவல்
பிரசுரம்=வெளியீடு
பிரதட்சிணம்=வலம்வருதல்
பிரணவம்=ஓங்காரம்
பிரதானம்=முதன்மை
பிரதானம்=சிறப்பு
பிரதி=படி
பிரதிகூலம்=மாறுபாடு
பிரதிகூலம்=எதிர்
பிரதிக்கினை=உறுதி
பிரதிக்கினை=ஆணை
பிரதிக்கினை=மேற்கோள்
பிரதிஷ்டை=நிலைபெறுத்தல்
பிரதிஷ்டை=கோயில் கொள்ளுவித்தல்
பிரதிதினம்=நாடோறும்
பிரதிதினம்=ஒவ்வொரு நாளும்
பிரதிநிதி=ஆணையாளர்
பிரதியுபகாரம்=கைம்மாறு
பிரதிவாதி=எதிர் வழக்காளி
பிரதேசம்=இடம்
பிரத்தாபம்=அறிவித்தல்
பிரத்தாபம்=வெளிப்படுத்தல்
பிரத்தியக்ஷம்=கண்கூடு
பிரத்தியக்ஷம்=தெளிவு
பிரத்தியேகம்=தனிமை
பிரபஞ்சம்=உலகம்
பிரபந்தம்=நூல்
பிரபந்தம்=நூற்றொகுதி
பிரபல்லியம்=புகழ்
பிரபல்லியம்=முதன்மை
பிரபல்லியம்=சிறப்பு
பிரபாவம்=புகழ்
பிரபாவம்=பெருமை
பிரபு=பெருந்தகை
பிரபு=பெருஞ் செல்வன்
பிரபு=தலைவன்
பிரமசாரி=மணமாகாதவன்
பிரமா=நான்முகன்
பிரமாணம்=அளவை
பிரமாணம்=தலைமை
பிரமாணம்=மேற்கோள்
பிரமாணம்=ஆணை
பிரமாணம்=கட்டளை
பிரமாண்டம்=பேருலகம்
பிரமாதம்=மிகுதி
பிரமானந்தம்=பேரின்பம்
பிரமித்தல்=மலைத்தல்
பிரமித்தல்=திகைத்தல்
பிரமித்தல்=மருளல்
பிரமேயம்=அளக்கப்படும் பொருள்
பிரமை=மயக்கம்
பிரமை=அறியாமை
பிரமோற்சவம்=பெருவிழா
பிரயத்தனம்=முயற்சி
பிரயாசை=முயற்சி
பிரயாசை=வருத்தம்
பிரயாசை=பாடு
பிரயாசை=உழைப்பு
பிரயாசை=தொல்லை
பிரயாணம்=பயணம்
பிரயாணம்=வழிப்போக்கு
பிரயாணம்=வழிச்செலவு
பிரயாணம்=செலவு
பிரயோசனம்=பயன்
பிரலாபம்=புலம்பல்
பிரவர்த்தி=முயற்சி
பிரவர்த்தி=செய்கை
பிரவாகம்=வெள்ளப்பெருக்கு
பிரவேசம்=நுழைவு
பிரவேசம்=முயற்சி
பிரளயம்=அழிவுக்காலம்
பிரளயம்=உலக ஒடுக்கம்
பிரளயம்=வெள்ளம்
பிரளயாகலர்=இருமலக்கட்டினர்
பிராகாரம்=கோயிற்சுற்று
பிராகாமியம்=நிறைவுண்மை
பிராணவாயு=உயிர்க்காற்று
பிராணவாயு=உயிர்வளி
பிராணவாயு=உயிர்ப்பு
பிராணி=உயிரி
பிராணி=சிற்றுயிர்
பிராது=முறையீடு
பிராது=முறைப்பாடு
பிராப்தம்=ஊழ்வினை
பிராப்தி=விரும்பியதெய்தல்
பிராமணன்=பார்ப்பான்
பிரார்த்தனை=நேர்த்திக்கடன்
பிரார்த்தனை=வேண்டுகோள்
பிரியம்=அன்பு
பிரியம்=விருப்பம்
பிரீதி=அன்பு
பிரீதி=உருக்கம்
பிரீதி=அவா
பிருதிவி=மண்
பிரேதம்=பிணம்
பிரேரேபித்தல்=முன்மொழிதல்
பீசம்=முளை
பீசம்=விதை
பீடம்=இருக்கை
பீடம்=மேடை
பீடை=துன்பம்
பீடை=பீழை
பீடை=நோய்
பீதாம்பரம்=பொற்பட்டாடை
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 63 பொருள் விளக்கச்சொற்கள் : 104
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333