விருபா வலைத்தளத்தில் இதுவரையில் இரண்டு அகராதி நூல்கள், மின்-அகராதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
நிகண்டு வகைப்பாட்டிலிருந்து 1876 இல் வெளியான
சிந்தாமணி நிகண்டும், அகராதி வகைப்பாட்டிலிருந்து 1938 இல் வெளியான
வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் எனும் அகராதியுமே இவ்வாறு மின்-அகராதிகளாக்கப்பட்டுள்ளன.
மிகவும் திட்டமிட்டு, கட்டமைப்புடன் கூடிய தரவுதளமாக இதனை அமைத்துள்ளோம். இதன் மூலம்
அறிவியல் அணுகுமுறையுடன் பல பகுப்பாக்கங்களைச் செய்யவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
மின்-அகராதியானது, அச்சடிக்கப்பட்ட அகராதிகளில் காணப்படாத (
Reverse Lookup ) தலைகீழாக
அல்லது மறுதலையாகப் பார்த்துக் கொள்ளும் வசதியையும் தருகிறது.
இதுவரையில் வெளியான அனைத்துத்
தமிழ் நிகண்டுகளிலும், அகராதிகளிலும் காணப்படும் அத்தனை சொற்களையும் குவியலாக்கி, ஓரிடமாகக்
காண்பிக்கும் பேரிணையம் ஒன்றை உருவாக்குவதற்கான முதற்படியாகவும் இதனைக் கொள்ளலாம்.
|
மேலும் பல்வேறு நிகண்டுகளையும், அகராதிகளையும் மின்-அகராதிகளாக்கி இணைத்துக்கொள்ளும்போது,
ஒன்றித்த நிலையில் அதிக அளவிலான சொற்களையும், இடைவெட்டு நிலையில் குறித்த ஒரு சொல்லிற்கான
அதிக விளக்கங்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக்கிடைக்கும்.
இந்தவகையில் சிந்தாமணி நிகண்டு
மூலம் 5422 சொற்களையும், வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் மூலம்
3129 சொற்களையும்
அறியமுடிகிறது. இரண்டு மின்-அகராதிகளிலும் காணப்படும்
614
சொற்களையும், அவற்றுக்கான பொருள் விளக்க வேறுபாடு / ஒற்றுமைகளையும் அறியும் நிலையில்
இங்கு தந்துள்ளோம்.
|